கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் விழா, வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட தலைவருமான செங்கதிர்செல்வன், மாவட்ட இணைச்செயலாளர் சக்திவேல் ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, இனிப்புகள் வழங்கினர். மேலும் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள, 36 கிராம ஊராட்சிகளிலும், மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் பரசுராமன், சங்கரன், சசி, முருகேசன், நாகராஜ் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய மகளிரணி தலைவி பூர்ணிமா நன்றி கூறினார்.