கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை, 7,399 ஆக உயர்ந்துள்ளது. இதில், 7,118 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று, 20 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை, கொரோனாவால் 112 பேர் இறந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்காக குறைந்த நிலையில், நேற்று, 24 என இரட்டை இலக்காக, கொரோனா பாதிப்பு அதிகரித்தது.