கிருஷ்ணகிரி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ வழக்கில், போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த, மாதேப்பட்டியை சேர்ந்தவர், மதன், 25; அங்குள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும், 16 வயது சிறுமியை, கடந்த, செப்.,21ல், பஸ் ஸ்டாப்பில் பார்த்துள்ளார். அவரை, வீட்டிக்கு கொண்டு சென்று விடுவதாக கூறி, தன் இருசக்கர வாகனத்தில், அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில், தானம்பட்டி மலைப்பகுதியில், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல், அடிக்கடி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், திருமணம் செய்து கொள்ள, சிறுமி கேட்டபோது, மதன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அச்சிறுமி நேற்று, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மதனை தேடி வருகிறார்.