செங்கம்: செங்கம் அருகே, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை, போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் நரிக்குறவர் காலனி பகுதியில், செங்கம் போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இருவரை மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் அப்பகுதியை சேர்ந்த, வேலு, 29, மகேஷ், 32, என்பதும், அவர்கள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில், காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.