அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், சமத்துவபுரம் அருகே, பொய்யேரிக்கரையை சேர்ந்தவர் கருப்பணகவுண்டர். வயது மூப்பால், கடந்த, 30ம் தேதி இரவு இறந்தார். முதல்வர் பழனிசாமிக்கு, இவர் தாய்மாமா உறவாகும். போனில் அவரது குடும்பத்தாருடன் முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானம் மூலம், கோவைக்கு இன்று காலை, 6:30 மணிக்கு வருகிறார். அங்கிருந்து காரில், அந்தியூரில் உள்ள தாய்மாமா வீட்டுக்கு செல்கிறார். அந்தியூர் ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலாளரும், தாய்மாமா மகனுமான கே.பி.எஸ்.ராஜா மற்றும் உறவினர்களிடம், முதலவர் துக்கம் விசாரித்து, மாமாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாளும், கருப்பணகவுண்டரும் உடன் பிறந்தவர்கள். கடந்த அக்., 13ல் தவுசாயம்மாள் இறந்த நிலையில், கருப்பண கவுண்டர் இறந்திருப்பது, குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.