காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே, ஒலிபெருக்கி மூலம், மத பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை, மக்கள் விரட்டியடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த, சுமைதாங்கி மெயின் சாலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு வேனில் வந்த, 10 பேர் ஒலி பெருக்கி மூலம், கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த மக்கள், வேனுடன் அவர்களை சிறை பிடித்தனர். பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்களை மக்கள் விரட்டியடித்தனர். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.