திருச்சி: டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று திருச்சி மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியமங்கலம் அடுத்த அம்பிகாபுரத்தில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மத்திய அரசின், வேளாண் திருத்த மசோதாவிற்கு எதிராக வங்கியை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்திற்கு, பொன்மலை, காட்டூர் பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் தடுத்ததால், போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியன், லெனின் உள்பட, 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வங்கியை முற்றுகையிட்டும், சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்திய, 54 பேரை போலீசார் கைது செய்தனர்.