திருச்செங்கோடு: திருச்செங்கோடு, புது பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சி கடைகளுக்கு, கொரோனா கால வாடகை முழுவதையும் தள்ளுபடி செய்ய கேட்டு, கடை உரிமையாளர்கள் நகராட்சி கமிஷனர் (பொ)குணசேகரனிடம் மனு அளித்தனர். கடை வியாபாரி சுப்ரமணி கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்டில், 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வரவில்லை. அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நகராட்சி சார்பில் வாடகை கேட்டு கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தகவல் பரவியதால், பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்கள், நகராட்சி கமிஷனர் குணசேகரனிடம் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.