குமாரபாளையம்: சி.பி.எம்., சார்பில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஒன்றிய செயலர் முருகேசன் தலைமையில், குமாரபாளையத்தில் நடந்தது. நகர செயலர் ஆறுமுகம் பெயர் பலகையை திறந்து வைத்து, கொடியேற்றி வைத்தார். கிளை செயலர் குருசாமி இனிப்பு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார்.