பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் தொடர் மழையால், சோளப்பயிர் செழிப்பாக வளர்ந்து வருகிறது. பள்ளிபாளையத்தில், வெள்ளிக்குட்டை, லட்சுமிபாளையம், பாதரை, எலந்தகுட்டை, சவுதாபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில், ஏராளமான விவசாயிகள், ஆண்டுதோறும், பருவமழையை நம்பி தீவன சாகுபடியான சோளப்பயிர் சாகுபடியில் ஈடுவர். இந்தாண்டும், வடகிழக்கு பருவமழையை நம்பி, ஒரு மாதத்துக்கு முன்பே, சோளப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டனர். கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. தொடர்ச்சியாக மழை பெய்வதால், சோளப்பயிர் செழித்து வளர்கிறது. இதே நிலையில், மழை பெய்தால், அறுவடை அதிகளவு கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.