ப.வேலூர்: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனை குழுவிலுள்ள ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தென்னை விவசாயிகளின் நலன் கருதி, வாரந்தோறும் செவ்வாயன்று மறைமுக தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த வாரம், 2,300 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன. அதிகபட்சம், கிலோ, 42, குறைந்தபட்சம், 34, சராசரியாக, 36 ரூபாய் என ஏலம் போனது. மொத்தம், 27 ஆயிரத்து, 530 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று, 1,500 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன. அவை, 41.50 - 27.00 - 38.50 ரூபாய் என ஏலம் போயின. மொத்தம், 18 ஆயிரத்து, 158 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.