நாமக்கல்: நாமக்கல்லில், '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் பேசினர். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சிலரின், சட்ட விரோத, தொழிற்சங்க விரோத செயல்களையும், பொதுமக்களுக்கு உயிர்காக்கும், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க விடாமல் தடுப்பதையும் கைவிட வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, அரசு வழங்கிய புதிய ஆம்புலன்ஸ்களை, இயக்காமல் தினமும், இரண்டு முதல், ஏழு ஆம்புலன்ஸ் வாகனங்களை, டவுன் டைம் போட்டு நிறுத்தி வைத்து, ஆம்புலன்ஸ் சேவையை சீரழிக்கும் அதிகாரிகளை, பொதுமக்களிடம் அம்பலப்படுத்துவது, ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்துவதற்கு, நிர்வாகம் எடுக்கும் பாரபட்சமற்ற நடவடிக்கைகளுக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.