நாமக்கல்: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரோனித் ரஞ்சன், பள்ளி மாணவ, மாணவியரின் மனநல மேம்பாட்டிற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடை பயணம், கன்னியாகுமரி முதல் டில்லி வரை, 4,000 கி.மீ., தூரம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த, 16ல், கன்னியாகுமரியில் துவங்கினார். பல்வேறு மாவட்டங்களை கடந்தவர், நேற்று, நாமக்கல் மாவட்டம் வந்தடைந்தார். அவர், ராசிபுரம் வழியாக, சேலம் சென்றடைகிறார். அவரை, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் பாராட்டி, புத்தகம் பரிசாக வழங்கினார்.