துவரம் பருப்புக்கு பதில் கொண்டைக்கடலை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு வினியோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
11:34

நாமக்கல்: கொரோனா நோய்த்தொற்று பரவுதலை தவிர்க்கும் வகையில், ரேஷன் கடைகளில், நாள் ஒன்றுக்கு, 225 அட்டைகளுக்கு மிகாமல், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக, கடந்த, மூன்று நாட்களாக, டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பி.எச்.எச்., மற்றும் ஏ.ஏ.ஒய்., கார்டுதாரர்கள், இன்று (டிச., 2), நாளை, 5, 6ம் தேதியும், டிச., 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில், என்.பி.எச்.எச்., கார்டுதாரர்களும், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த மாதம், பி.எச்.எச்., மற்றும் ஏ.ஏ.ஒய்., கார்டுதாரர்களுக்கு மட்டும், துவரம் பருப்புக்கு பதில், ஐந்து கிலோ முழுக்கொண்டைக்கடலை விலையின்றி வழங்கப்படும். அதேபோல், என்.பி.எச்.எச்., கார்டுதாரர்களுக்கு, இம்மாதத்துக்கு, ஒரு கிலோ துவரம் பருப்பு மட்டும் விலையின்றியும், (கொண்டைக்கடலைதவிர) இதர அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படும். இந்த நடைமுறை, இன்று (டிச., 2) முதல், அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வினியோகம் செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை, 94450 00232 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X