கோவை: கோவை மாவட்டம் உக்கடத்தில் இருந்து மதுக்கரை நோக்கி சென்ற தனியார் பஸ், அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து, உக்கடம் புதிய மேம்பாலம் கீழ் உள்ள ஏ. பி.டி. பெட்ரோல் பங்கில் புகுந்தது. அங்குள்ள பெட்ரோல் போடும் இயந்திரத்தில் இடித்து நின்றது. இந்த விபத்தில், பெட்ரோல் பங்கில் நின்றிருந்த பொள்ளாச்சி, முத்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தனியார் பஸ் டிரைவர், கண்டெக்டர் தப்பி ஓடினர்.