நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை, முக கவசம் அணியாமல், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்த, 230 பேர், 19 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக, முக கவசம் அணிய வேண்டும். கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கையுறை அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.