பள்ளிபாளையம்: அண்ணா நகர் பகுதியில் கார் மோதி, டூ வீலரில் சென்ற முதியவர் பலியானார். பள்ளிபாளையம் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் பழனியப்பன், 75. அவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் அவ்வழியாக டூ வீலரில் செல்லும் போது, எதிரே வந்த கார் மோதியது. இந்த விபத்தில், பழனியப்பன் படுகாயம் அடைந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.