நாமக்கல்: சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக, மகனுடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார். நாமக்கல் போதுப்பட்டி காலனியை சேர்ந்தவர் பாபு, 45. பஸ் பாடிகட்டும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது மகன் மணிகண்டன், 20. அவர், அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் மனம் உடைந்த அந்த சிறுமி, கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்துள்ளார். நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியை, தற்கொலைக்கு தூண்டியதாக, பாபு, மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.