ப.வேலூர்: பரமத்தி, பாவடி தெருவைச் சேர்ந்தவர் சிவபிரகாசம், 56; நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பழனியம்மாள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவப்பிரகாசம், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குக்கு அருகே படுத்து தூங்கியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அகல் விளக்கில் இருந்து சிவப்பிரகாசம் மீது தீப்பற்றியது. இந்நிலையில், அவரது மகன் தீனதயாளன், 33, சேலம் சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்து போது, தந்தை உடல் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். ஆனாலும், சிவப்பிரகாசம் உடல் கருகி உயிரிழந்தார். பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.