நாமக்கல்: நாமக்கல், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. நாமக்கல் - சேலம் சாலையில், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், அலுவலக கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, புனேவில் உள்ள தலைமை அலுவலகத்தில், எச்சரிக்கை மணி அடித்துள்ளது. அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக, நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள், அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி சென்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அலுவலகத்தில், கணினிகள், முக்கிய ஆவணங்கள் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.