பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஆற்றுப்பகுதியில் ஓடப்பள்ளி நீர் தேக்கம் பகுதியில் ஜிலேபி, கட்லா, லோகு, ஆறா உள்ளிட்ட பல வகையான மீன்கள் உள்ளன. தினமும் ஏராள மானவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்கின்றனர். நீர் தேக்கம் பகுதியில் சில மாதங்களாக, ஆகாயத்தாமரை படர்ந்து காணப்பட்டது. இது நாளுக்குநாள் வளர்ந்து தற்போது பல இடங்களில், ஆற்றின் இருகரைகளையும் தொட்டு கொண்டுள்ளது. ஆற்றில் நீர்பரப்பு தெரியாதளவுக்கு படர்ந்துள்ளதால், பரிசலில் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே பரிசலில் சென்று, வலை போட்டு மீன் பிடிப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளது. வலையில் மீன்கள் மிக குறைந்தளவு தான் சிக்குகின்றன. ஆகாயத்தாமரையால் மீன் பிடிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.