மல்லசமுத்திரம்: மாமுண்டி திருமணிமுத்தாறு மேம்பால சாலையில், மின்விளக்குகள் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டி திருமணிமுத்தாற்றின் வழியே, தினமும் மல்லசமுத்திரம், சர்கார் மாமுண்டி, சப்பையாபுரம் பகுதிகளுக்கு, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைதுறையினரால், மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரத்தில் விஷ ஜந்துகளாலும், திருடர்களாலும், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து, அதிகாரிகளிடத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேம்பால சாலையில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.