கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து வார்டுகளில், குப்பை அகற்றி தூய்மை செய்யப்பட்டு மேலும், வீடுகளில் கழிவு நீர் தேங்கமால் இருக்க மக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்பட்டது. நல்ல குடிநீரை மூடி வைத்திருக்க வேண்டும்; சுத்தமாக இருத்தல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும், கொசு மருந்து அடிக்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.