கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி, பாசன வாய்க்கால் கரை, தூர் வாரும் பணியில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், பழைய கரூர்-திருச்சி நெடுஞ்சாலை பாசன வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் செடிகள் வளர்ந்ததால், தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆகையால், பாசன வாய்க்காலில் வளர்ந்த செடிகளை அகற்றுவதற்கான பணிகளில், நேற்று, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் வாய்க்கால் இரு கரைகளிலும், வளர்ந்த செடிகளை அகற்றும் பணி நடந்தது.