கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை முகாம் நடந்தது. டாக்டர் ஜோடன் தலைமை வகித்தார். இதில், இயற்கை முறையில் எந்த விதமான பாதிப்பு வராமல் இருக்கும் வகையில், நோயாளிகள் நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேசமயம், நல்ல தூக்கமும் அவசியம். மேலும், சத்தான உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது, நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும், நோய் குறைந்து நலமுடன் இருக்க முடியும். ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகையால் நல்ல உணவு, உடற்பயிற்சி, தூக்கம் ஆகிய மூன்றையும், தினமும் கடைப்பிடிக்க வேண்டும் என, டாக்டர் ஜோடன் மருத்துவ ஆலோசனை வழங்கினார். சித்த மருத்துவ டாக்டர் ஷிபா, டாக்டர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.