குளித்தலை: டில்லியில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, குளித்தலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 25 பேரை போலீசார் கைது செய்தனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து, மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி, தபால் நிலையம் முன்புறம், பல்வேறு அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜீ தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட், காங்., மற்றும் வி,சி.கட்சியை சேர்ந்த, 25 பேரை குளித்தலை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.