தட்டை பயறு அறுவடை துவக்கம்: விரைவில் சந்தைகளில் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2020
11:45

கரூர்: கரூர் மாவட்டத்தில், தட்டை பயிறு அறுவடை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.


கடந்த ஜூலை இறுதியில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆற்றுப்பகுதிகளான புகளூர், வாங்கல், நெரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, வெள்ளியணை, ராஜபுரம், சின்னதாராபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி மற்றும் கடவூர் உள்ளிட்ட பகுதிகளில், மானாவாரி நிலங்களில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டன. அதில், ஊடுபயிராக தட்டை பயறு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டது. காய் பிடிக்கும் பருவத்தில், மழை பெய்ததால் தட்டை பயறு நல்ல மகசூலை அடைந்துள்ளது.


இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த, மூன்று மாதங்களாக காவிரியாற்றில் தண்ணீர் செல்கிறது. இதனால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த, இரண்டு மாதங்களாக மழை திருப்திகரமாக உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாய கிணறுகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால், மானாவாரி நிலங்களில் பயறு வகைகள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. அதில், தட்டை பயறு அறுவடை துவங்கியுள்ளது. விவசாய நிலங்களை தேடி, மொத்த வியாபாரிகள் வருகின்றனர். ஒரு கிலோ தட்டை பயறுக்கு, 80 முதல், 90 ரூபாய் வரை கேட்கிறோம். ஆனால், 60 முதல், 70 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அடுத்த மாதத்தில் கிராம சந்தைகளில், பயறு வகைகள் அதிகளவில், குறைந்த விலைக்கு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X