அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஒன்றிய ஆணையர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து, அராஜகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரியும், கோஷம் எழுப்பினர். ஊரக வளர்ச்சித்துறை சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.