அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிகோம்பை அருகே, குடகனாறு ஆற்றுப்பகுதியில் உள்ள பாலத்தின் கீழே, 55 வயது மதிக்கத்தக்க பெண், மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, நேற்று பெரிய மஞ்சுவழி வி.ஏ.ஓ. ராமலிங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர், அரவக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.