கரூர்: கரூர் நகரில், தெரு பெயர் பலகைகள் மோசமான நிலையில் இருப்பதால், மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. கரூர் நகராட்சியில் உள்ள தெருக்களில், பெயர் பலகைகள் கடந்த, 2011-16ம் ஆண்டுகளில் வைக்கப்பட்டது. தற்போது, பல இடங்களில் பலகைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால், புதிதாக வரும் பொதுமக்கள், தெருக்களின் பெயர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். மேலும், உடைந்திருந்த இரும்பு பலகைகளை சிலர், தூக்கி சென்று விட்டனர். இதனால், புதிய பலகைகள் வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.