கரூர்: சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் ஓடும் கழிவுநீரால், மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். கரூர், வேலாயுதம்பாளையம் சாலையில் உள்ள, சாக்கடை கால்வாய்கள், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் உடைப்பால் பல இடங் களில் சாலையில் ஓடுகிறது. அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்படுகிறது. இதனால், சாலையில் கழிவுநீர் தேங்காத வகையில், சாக்கடை கால்வாய்களை உடனடியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.