கிருஷ்ணராயபுரம்: திருக்காம்புலியூர் கிராமத்தில், கட்டளை வாய்க்கால் நடை பாலம் சேதம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூரில் இருந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. வாய்க்கால் நடுவே நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் வழியாக, விவசாயிகள், மக்கள் சென்று வந்தனர். தற்போது நடைபாலம் தூண்கள் சரிந்துள்ளன. மேலும், பாலம் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால், மக்கள் நடைபாலம் வழியாக செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, வாய்க்கால் நடுவே உள்ள நடைப்பாலத்தை, புதிதாக கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.