அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், கொசுக்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். அரவக்குறிச்சி பகுதிகளில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கழிவுநீர் கால்வாய்கள், தெருக்கள் மற்றும் சாலை ஓரங்களில், மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை வேளைகளில் கொசுக்களின் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளது. நகர் பகுதியில் வீடுகளில் கொசுக்கள் அதிகமாக கடிப்பதால், முதியவர்கள், குழந்தைகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொசுக்களால் டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் நிலை உருவாகி உள்ளது. எனவே, சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம், கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.