76 சிக்னல்...1008 சிக்கல்!  கோவை நகருக்குள் அரசுத்துறைகளுக்குள் உரசல்.. யூனிட்டுக்கு ரூ.12 வசூலிப்பதால் போலீஸ் 'ஷாக்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2020
00:50

கோவை நகரிலுள்ள சிக்னல் கள் பராமரிப்பு, 'நடுரோட்டில்' நிற்கிறது. எந்த துறையும் பொறுப்பேற்காமல் கைகழுவி விட்டன. இப்பிரச்னையில் உள்ள சிக்கல்களை, மிக அவசரமாக தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 76 சிக்னல்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் உள்ள, 52 சிக்னல்களை மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவும், 11 சிக்னல்களை உயிர் அமைப்பும், பராமரித்து வருகின்றன.இதற்கு முன், இந்த சிக்னல்களில் விளம்பரங்களை வைத்து அதில் வரும் வருவாயைக் கொண்டு, மாநகராட்சி நிர்வாகமே பராமரித்து வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, விளம்பரங்கள் அகற்றப்பட்டன.



அதன் பின்பு, இவற்றைப் பராமரிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோவையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில், சிக்னல் பராமரிப்புக்கு எந்தத்துறை செலவிடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.பராமரிப்பு நிதி ஒதுக்கவில்லைகோவை மாநகரில் உள்ள சிக்னல்களையும், அதில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி'க்களையும் பராமரிப்பதற்கு, மாநகர காவல்துறைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென்று, அரசுக்கு பலமுறை பரிந்துரை அனுப்பியும், இதுவரை நிதி ஒதுக்கப்படவே இல்லை.இதனால் எந்தத் துறையுமே, இதற்குரிய மின் கட்டணத்தைச் செலுத்துவதில்லை. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்குரிய அத்தியாவசியமான தேவை என்பதால், மின் வாரியமும் இதற்கான இணைப்புகளைத் துண்டிக்காமல், மின்சாரம் வினியோகித்து வருகிறது.நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்னைக்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு சிக்னலுக்கும் அதன் தேவையின் பொருட்டு, 3லிருந்து 5 கிலோ வாட் திறனுள்ள, மின் இணைப்பு பெறப்படுகிறது.தற்போது ஒரு கிலோ வாட்டுக்கு, 690 ரூபாய் வீதம் மாதாந்திரக் கட்டணமும் (Demand Charge), அத்துடன் பயன்பாட்டிற்கேற்ப யூனிட்டுக்கு, 12 ரூபாய் வீதமும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



முதலில் இந்த சிக்னல்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு ரூ.8.05 வீதமாக வணிகக்கட்டணம் (Commercial Tariff-V) வசூலிக்கப்பட்டது.சிக்னல்களில் தனியாரால் விளம்பரம் வைக்கப்பட்டு, அதற்கு அதீதக் கட்டணம் பெறப்பட்டதால், ஆடம்பர விளக்குகளுக்கான (Luxury Lighting) மின் கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.12 வீதம் (Tariff -VI) மாற்றப்பட்டது.உயிர் கொடுத்த 'உயிர்'விளம்பரங்களை அகற்றிய பின்னும், அதே மின் கட்டணத்தில் யூனிட் கணக்கிடப்படுகிறது. தற்போது எந்தத் துறையும், சிக்னல் பராமரிப்புப் பொறுப்பை ஏற்காத நிலையில், அனைத்து சிக்னல்களையும் பராமரிக்கும் பொறுப்பு, உயிர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.ஆர்., எனும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியில், பராமரிப்பை மேற்கொள்ள சாலை பாதுகாப்புக்குழு அனுமதி அளித்துள்ளது.எனவே, சிக்னல்களுக்கான மின் கட்டண விகிதத்தை, மக்கள் பயன்பாட்டுக்குரிய (Public Lighting-Tariff - II-A) விளக்குகளுக்குரிய கட்டணமாக மாற்ற வேண்டு மென்று, மின் வாரியத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனால், மின் இணைப்பு யாருடைய பெயரில் இருக்கிறதோ, அவர்கள் தரப்பில் விண்ணப்பம் தரவேண்டு மென்று, மின் வாரியம் கோரியுள்ளது.நிரந்தர தீர்வு காண வேண்டும் கோவை நகரிலுள்ள சிக்னல் மின் இணைப்புகள், எந்தவொரு துறையின் கீழும் மொத்தமாக இல்லை. நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர், போலீஸ் கமிஷனர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர், மாநகராட்சி கமிஷனர் என வெவ்வேறு அதிகாரிகள் பெயர்களில் உள்ளன. அதைவிடக் கொடுமை, பெரும்பாலான இணைப்புகள், தனியார் விளம்பர நிறுவனங்கள் பெயர்களில் இருப்பதுதான்.அனைத்து மின் இணைப்புகளையும், மாநகர காவல்துறையின் கீழ் கொண்டு வரவேண்டிய கட்டாயம் இருந்தாலும், சிக்னல் பராமரிப்புக்கு அரசு நிதி ஒதுக்கினால் மட்டுமே, இது சாத்தியம்.இப்படியாக குழப்பங்கள் கும்மியடிக்கும், சிக்னல் பராமரிப்புப் பிரச்னைக்கு, நிரந்தரத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு, உயர் அதிகாரிகளை விட உள்ளூர் அமைச்சருக்கே அதிகமுள்ளது.மலுமிச்சம்பட்டியில் புதிய சிக்னல்!கோவை-பொள்ளாச்சி ரோட்டில் மலுமிச்சம்பட்டி சந்திப்பு, பெரும் போக்குவரத்து நெரிசல் உள்ள சந்திப்பாக மாறியுள்ளது. அங்கு சிக்னல் அமைத்துத்தர வேண்டுமென்று, கோவை சரக ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., ஆகியோர் கேட்டுக் கொண்டதன் பேரில், அங்கு புதிய சிக்னல் அமைத்துத்தர, உயிர் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான பணி, விரைவில் துவங்குமென்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X