கிழக்கில் ஒன்று மேற்கில் ஒன்று; காரமடைக்கு 2 பை-பாஸ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2020
01:01

கோவையிலிருந்து ஊட்டிக்குச் செல்லும் வாகனங்கள், காரமடை ஊருக்குள் செல்வதைத் தவிர்க்கும் வகையில், 2 புறவழிச்சாலைகள் அமைக்க, மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.



கோவையிலிருந்து கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் வரையிலான, தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.181), இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக இருப்பதுடன், சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கான முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.இந்த ரோட்டில் கோவை-மேட்டுப்பாளையம் வரையிலான ரோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வருகிறது. இதில் நரசிம்மநாயக்கன்பாளையம்-காரமடை வரையிலான பகுதி, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.



இருப்பினும் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய நகரங்களைக் கடந்து செல்வதில் பெரும் நேர விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. தற்போது பெரிய நாயக்கன்பாளையம் நகர்ப்பகுதியில், பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை ஆகிய நகரங்களுக்குள், வாகனங்கள் செல்வதைத் தவிர்க்கும் வகையில், புறவழிச்சாலைகள் அமைக்க வேண்டுமென்பது, நீண்ட கால கோரிக்கையாகவுள்ளது.இதில் மேட்டுப்பாளையம் நகருக்கான புறவழிச்சாலை அமைப்பது, பத்தாண்டுகளுக்கும் மேலாக தள்ளிக் கொண்டு போகிறது.



குறைந்தபட்சமாக காரமடைக்குள் செல்வதை, தவிர்ப்பதற்காவது அங்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென்று எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.இதற்கான திட்டம், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த, மாவட்ட சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில், இது தொடர்பான 2 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதன்படி, காரமடைக்கு மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை என இரண்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. இதில் மேற்கு புறவழிச்சாலை என்பது, 1.7 கி.மீ., துாரத்திற்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.சின்ன மத்தம்பாளையம்-பெள்ளாதி வரையிலான சாலையை, 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, கிழக்கு புறவழிச்சாலை அமைக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை அமைக்கும் பணியையும், இந்தப் பணிகளையும் விரைவு படுத்துமாறு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார். இதில் காரமடை புறவழிச்சாலைகளுக்கான பணிகளுக்கு, விரைவில் ஒப்புதல் கிடைத்து, பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வேஸ்ட் ஆனது பஸ் ஸ்டாண்ட்!காரமடை பஸ் ஸ்டாண்டுக்கு, டவுன்பஸ்களைத் தவிர வேறு எந்த பஸ்களும் வராத நிலை இருந்தது. இப்போது ரயில்வே மேம்பாலம் கட்டிய பின், டவுன்பஸ்களுமே அங்கு சென்று திரும்ப முடியாத நிலை இருப்பதால், தற்போதுள்ள பஸ் ஸ்டாண்ட் எதற்கும் பயன்படாமல் வீணாகவுள்ளதாக, சாலை பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில், புகார் தெரிவிக்கப்பட்டது.எனவே, பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்கள் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் அல்லது பஸ் ஸ்டாண்டை இடம் மாற்ற வேண்டுமென்று, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட கலெக்டர் ராஜாமணி, ''தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒரு வாரம் அங்கு ஆய்வு செய்து என்ன செய்யலாம் என்பது பற்றி அறிக்கை தர வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X