கடலுார்:சேத்தியாதோப்பு அருகே, 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
கடலுார் மாவட்டம், சோழத்தரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 6 வயது சிறுமியை, அவரது தாய் கடந்த, 27ம் தேதி அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டு, வேலைக்கு சென்று உள்ளார். மாலை வீடு திரும்பிய தாய், உறவினர் வீட்டிற்கு சென்றபோது, அங்கு தன் மகளை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்றதை பார்த்துள்ளார். அவரது புகாரின்படி, சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை, போக்சோவில் கைது செய்து, கடலுார் இளம்சிறார் சீர்திருத்த மன்றத்திற்கு அனுப்பினர்.