ராமேஸ்வரம்:புரெவி புயலால் தனுஷ்கோடியில் மீனவர்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் வருவாய்துறையினர் தங்க வைத்தனர். அரிச்சல்முனையில் புறக்காவல் நிலையம் சேதமடைந்தது.
புரெவி புயலால் தனுஷ்கோடி கடலோரத்தில் தங்கியுள்ள மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் இருந்ததால், அங்கிருந்த 250 மீனவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த வேனில் அழைத்து செல்லப்பட்டு ராமேஸ்வரம் புயல் காப்பகத்தில் தங்க வைத்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனையில் எழுந்த ராட்சத அலையால் அங்கிருந்த புறக்காவல் நிலைய தடுப்பு சுவர் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.
படகு மூழ்கியது:பாம்பன், மண்டபம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்ததால், மண்டபம் வடக்கு கடற்கரையில் இருந்த ஒரு விசைப்படகு நங்கூர கயிறு அறுந்து மூழ்கியது. இதனை மீட்க முடியாமல் மீனவர்கள் சிரமம் அடைந்ததால், படகிற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. தனுஷ்கோடி கடற்கரையில் மூழ்கிய நாட்டுபடகை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.