விருத்தாசலம்; அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட அருண், மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவனிடம் ஆசி பெற்றார்.கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் விருத்தாசலம் வழக்கறிஞர் அருண். இவரை, மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவன் பரிந்துரையின் பேரில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கோவை மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு துணைச் செயலாளராக நியமனம் செய்தனர்.மாவட்டச் செயலாளர் அருண்மொழிதேவனை வழக்கறிஞர் அருண் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக, கோவை மண்டல செயலாளர் சிங்கை ராமசாமியிடம் வாழ்த்து பெற்றார்.