சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரில் அ.தி.மு.க., இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.கடலுார் மேற்கு மாவட்டம், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார். கடலுார் மேற்கு மாவட்ட பாசறை செயலாளர் ரமேஷ், தலைமை நிலைய பேச்சாளர் முருகுமணி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் வீரமூர்த்தி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.ஒரத்துார் ஊராட்சித் தலைவர் ராஜலட்சுமி ராமச்சந்திரன் வரவேற்றார். இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் துவக்கி வைத்து பேசினார்.ஒன்றிய இணை செயலாளர் சுனிதாபாரதி, சுரேஷ்பாபு, முன்னாள் கவுன்சிலர்கள் மாயவேல், அய்யாதுரை, ஞானசேகரன், சக்திவேல், முன்னாள் சேர்மன் வள்ளி தில்லை மணி, ஒன்றிய நிர்வாகிகள் செந்தமிழ்செல்வன், கமலக்கண்ணன், ராஜ்குமார், செல்வராசு, குமார்,கூட்டுறவு சங்க தலைவர்கள் கார்த்திக், ராஜா, மனோகர், பட்டுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.