பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய சேர்மன் கருணாநிதி, மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி வரவேற்றார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.மாவட்ட அவைத் தலைவர் குமார், தொழில் நுட்ப செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கோதண்டராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், ஆனந்த ஜோதி சுதாகர், பாஸ்கர், ரவி, ஊராட்சித் தலைவர் சமயசங்கரி மோகன், ராஜேஸ்வரி ரங்கசாமி, கோமதி கல்யாணம், மரகதம், ஜெ., பேரவை முருகன், தொழில் நுட்ப ஒன்றிய செயலாளர் வசந்த், துணை செயலாளர் தினேஷ், முன்னாள் ஊராட்சி செயலர்கள் அருள்மணி, கண்ணன், தொழில் நுட்ப பொருளாளர் சுவாமி நாதன், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சிவக்குமார், நாகராஜ், ராமச்சந்திரன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.