நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே ஆற்று மணல் கடத்திய மினி வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ஜவகர்சிங் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலம்பிநாதன்பேட்டை நான்குமுனை சந்திப்பின் வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். போது வேனை ஓட்டி வந்த சிலம்பிநாதன்பேட்டை கனக மணிகண்டன் தப்பியோடினார்.சோதனையில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. நடுவீரப்பட்டு போலீசார் வேனை பறிமுதல் செய்து, தப்பியோடிய கனக மணிகண்டனை தேடி வருகின்றனர்.