புதுச்சேரி; ஆச்சார்யா கலை அறிவியல் கல்லுாரியின், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியாக ஐ.ஏ.எஸ்., புத்தாக்க பயிற்சி நடந்தது
.ஆச்சாரியா கலை அறிவியல் கல்லுாரி, சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ். அடகாமி இணைந்து, ஆச்சார்யா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குநர் அரவிந்தன் வழிகாட்டுதல்படி நடந்த இப்பயிற்சிக்கு கல்லுாரி உயர்தொழில்நுட்ப துறை உதவி பேராசிரியர் மீனாட்சி வரவேற்றார். ஆச்சார்யா கல்வி குழுமத்தின் தலைமை இயக்க அலுவலர் ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ். பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்தியக்கிருஷ்ணன், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். வணிகவியல் துறை தலைவர் சதீஷ்கதன் நன்றி கூறினார். கல்லுாரியின் ஐ.ஏ.எஸ். ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், கல்லுாரி முதல்வர், துணை முதல்வர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.