புதுச்சேரி; ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு தார்ப்பாய் வழங்கப்பட்டது.வில்லியனுார் அடுத்த கோர்க்காடு ஏரிக்கரையோரத்தில் பழங்குடியினர் வசிக்கும் வீடுகளின் கூரைகள் நிவர் புயலில் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் புதுச்சேரி கிளை சார்பில் தார்ப்பாய் வழங்கப்பட்டது.ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளையின் மேலாண்மை கமிட்டி உறுப்பினர்கள் அய்யனார், ராமன் தார்பாய்களை பழங்குடியின மக்களுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் உறுப்பினர் ஸ்ரீபன் செல்வராஜ், நீர்நிலை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அசோக், பழங்குடியினர் மக்கள் அமைப்பின் தலைவர் ஏகாம்பரம், கோர்க்காடு துணை சுகாதார நிலையத்தின் கிராமப்புற செவிலியர் தரணி தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வில்லியனுார், கரிக்கலாம்பாக்கம், மதகடிப்பட்டு போன்ற பகுதிகளிலும் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.