புதுச்சேரி; தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத இடங்களை அரசு பெற வேண்டும் என அ.ம.மு.க., மாநில செயலாளர் வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை;தனியார் மருத்துவ கல்லுாரிகள் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வரை சென்டாக் கலந்தாய்வு நடத்தக் கூடாது என ஐகோர்ட் தீர்ப்பை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியதாகும். அரசே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.இனியும் காலம் தாழ்த்தாமல் 50 சதவீத இடத்தில் புதுச்சேரி மாணவர்களை சேர்த்த பிறகே, வெளி மாநில மாணவர்களுக்கு சென்டாக் கலந்தாய்வு நடத்திட வேண்டும். மேலும் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி கேட்டு மத்திய அரசிற்கு கோப்பு அனுப்பப்பட்டு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. எனவே கவர்னருடன் கலந்து பேசி உடனடியாக கவர்னர் மற்றும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் டில்லி சென்று மத்திய அரசையும் சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை நேரில் சந்தித்து அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.