கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைந்த பட்ச உதவித் தொகை 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். தனியார் துறை பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தி சட்டம் நிறைவேற்ற வேண்டும்.அரசு துறையில் உள்ள காலி பணியிடங்களை 3 மாத காலத்திற்குள் அறிவித்து முழுமையாக நிரப்பிட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியும் முழுவதுமாக நிரப்பபடாமல் உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், 40 பெண்கள் உட்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.