உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கல் கடத்தி வந்த லாரியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பச்சைவெளி பகுதியில் தாசில்தார் காதர் அலி தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தினர்.லாரியை நிறுத்திய டிரைவர் தப்பியோடினார். அதிகாரிகள், லாரியை சோதனை செய்ததில் கூழாங்கல் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன் லாரியை பறிமுதல் செய்து, உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.