பள்ளிக்கரணை 'பயோ மைனிங்' விரைவில் முடிக்கப்படும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

03 டிச
2020
06:23
பதிவு செய்த நாள்
டிச 03,2020 05:46

சென்னை: 'பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை, 'பயோ மைனிங்' முறையில், 2021 பிப்ரவரிக்குள் முடிக்கப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், 13.4 ஏக்கர் பரப்பளவில், மாநகராட்சி குப்பை கொட்டிஉள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புஅங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையால், நீர் ஆதாரம், தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, சுவாச பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளும் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.எனவே, குப்பை கிடங்கை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 2019 ஜூலை, 24 முதல், பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள குப்பை முழுதும், 'பயோ மைனிங்' முறையில் அழிக்கும் பணி துவங்கப்பட்டுஉள்ளது. அதன்படி, 2.84 கோடி ரூபாய் செலவில், 40 ஆயிரத்து, 855 டன் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரமாகவும், மக்காத குப்பைகளில் மறுசுழற்சி மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படுகிறது.இதற்கான பணிகள் முழுதும், 2021 பிப்ரவரிக்குள் முடிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில், 13.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில், 2.81 ஏக்கரில் குப்பைகள் உள்ளன. அதன்படி, 40 ஆயிரத்து, 855 டன் குப்பை, பயோ மைனிங் முறையில் அழிக்கும் பணி நடைபெற்றது. தற்போது வரை, 35 ஆயிரத்து, 556 டன் குப்பை, உரம் மற்றும் மறுசுழற்சி முறையில் அழிக்கப்பட்டு உள்ளது. மாசு இல்லாத பகுதிமீதமுள்ள குப்பை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான பணிகள், 2021 பிப்ரவரியில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பை முழுதும் அகற்றப்பட்ட பின், சுற்றுச்சூழல் மாசு இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும். தொடர்ந்து, பயோ காஸ் மற்றும் குடிநீர் வாரிய பணிகள் போன்றவற்றிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வருகிறது. தற்போது, சென்னையில், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில், தரம் பிரிக்கப்பட்டு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அங்கும், குப்பை முழுதும் அகற்றுவதற்கான திட்டங்கள் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கொடுங்கையூர் பெருங்குடி பரிதாபங்கள்!சென்னை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் உள்ள பள்ளிக்கரணை உள்ளிட்ட சில குப்பை கிடங்குகளும், பல்லாவரம், அனகாபுத்துார், பம்மல், பூந்தமல்லி போன்ற நகராட்சிகளின் குப்பை கிடங்குகளும், பயோ மைனிங் முறையில், குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன.ஆனால், பல ஆண்டுகளாக, சென்னைவாசிகளின் குப்பையை மாநகராட்சி குவித்து வைத்துள்ள, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குகளுக்கு மட்டும், இன்னும் விடிவு கிடைக்கவில்லை. ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் இருந்து, இன்று வரை, இந்த குப்பை கிடங்குகளை ஓழிக்க, திட்டங்கள் மட்டுமே போடப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களுக்கு அறிக்கை தயாரிக்கவே, பல கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. எந்த அதிகாரியும், இந்த குப்பை கிடங்குகளுக்கு, உருப்படியான எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்தவில்லை.திடக்கழிவு மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தும் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், அத்துறைக்கு தலைமை பொறியாளர் முதல் உதவி பொறியாளர் வரை திறமையான அதிகாரிகளை நியமித்து, குப்பை கிடங்குகளுக்கு ஒரு முடிவு கட்டினால், சென்னைவாசிகளின் மறக்க முடியாத அதிகாரியாக பிரகாஷ் இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
03-டிச-202022:22:07 IST Report Abuse
R chandar Water problem and Garbage problem are permanent problem to the city for many years to resolve this 1) Install rain harvest well in water stagnated area , install more diesalination plants and increase the water supply through pipeline instead of lorry 2) Garbage accumulation point to be identified and clear garbage on information itself and see to it bio mining method it dissolves ,employ more person for this job and combine bothe metro water and corporation office and collect tax as one from all as metro tax and see to it operation cost of office gets reduced
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X