வேளச்சேரி; தங்கை வெளியூர் சென்ற நேரத்தில், அவர் வீட்டுக்கு சென்று நகை திருடிய அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.
வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தேவி, 30. இவர், 'நிவர்' புயலின்போது, வீட்டில் மழைநீர் புகுந்ததால், செய்யூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.வீட்டில், தந்தை மட்டும் இருந்தார். மழைநீர் வடிந்தபின், வீட்டுக்கு திரும்பும்போது, பீரோவில் இருந்த, 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது.தந்தையிடம் விசாரித்தபோது, தேவியின் சகோதரர் ரவி, 39, வந்து சென்றது தெரிந்தது.
வேளச்சேரி போலீசில், தேவி புகார் அளித்தார். விசாரணையில், நகையை திருடியது ரவி என தெரிந்தது.போலீசார், நேற்று ரவியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். நகை பறிமுதல் செய்யப்பட்டது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தேவி வீட்டுக்கு செல்லும்போதெல்லாம், ஏதாவது பொருட்களை திருடி செல்வதை, வழக்கமாக வைத்துள்ளார்.சில மாதங்களுக்கு முன், தேவியின் குழந்தை அணிந்திருந்த நகையை திருடி சென்றுள்ளார்.