சென்னை; துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட, 22.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், ஐ போன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு நாடான - யு.ஏ.இ.,யின், துபாய் நகரிலிருந்து, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 7:05 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் மன்னன், 46, அப்துல் ரஷீத், 34 ஆகிய இருவரையும், சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். அதில், அவர்கள் இருவரது உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 240 கிராம் தங்க கட்டி, 12 ஐ போன்கள், 11 பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், 22.66 லட்சம் ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.