மயிலாப்பூர்; மயிலாப்பூரில், பிரபல நடிகரிடம், மொபைல் போன் பறித்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்துாரி ரங்கன் சாலை, முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர், கவுதம் கார்த்திக், 31. நடிகரான இவர், பிரபல நடிகர் கார்த்திக்கின் மூத்த மகன் ஆவார்.இவர், கடல், வை ராஜா வை உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். நேற்று அதிகாலை, 5:00 மணிஅளவில், ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில், 'சைக்கிளிங்' பயிற்சி மேற்கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, கவுதம் கார்த்திக்கிடம் இருந்து பறித்து தப்பினர்.இது குறித்து, மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.